திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு தரிசன ஏற்பாடு

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருவேற்காடு கருமாரியம்மன்
திருவேற்காடு கருமாரியம்மன்
Published on

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவில் அலுவலகத்தில் இணை ஆணையர் செல்லத் துரை தலைமையில் நடை பெற்றது.

இதில் நகராட்சி அதிகாரி கள், காவல்துறையினர், வியாபாரிகள் சங்கத்தினர், மாநகர போக்குவரத்து, தீயணைப்புத் துறை, மின்வாரியம், தொலை பேசி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

பக்தர்களின் வசதிக்காக, சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதி, தடையற்ற மின்வசதி, போலீஸ் பாதுகாப்பு, சென்னையின் பிற பகுதிகளிலிருந்து திருவேற்காடு வந்து செல்ல மாநகர பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அனைத்து துறையினரின் உதவியுடன் செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக சிறப்பு வரிசை ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கோவில் நிர்வாகம், காவல்துறை சார்பில் சி.சி.டி.வி. கேமரா மூலம் கூட்டத்தினரை கண் காணித்து கட்டுப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத் தில் கோவில் முன்னாள் அறங்காவலர் ரமேஷ், வியாபாரிகள் சங்க தலைவர் அருணகிரி, கோவில் அதிகாரிகள் கண்ணன், மலைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com