ஆழித்தேரோட்டம்: திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் அலங்கரிக்கும் பணிகள் மும்முரம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
Published on

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த தேர் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு கம்புகளை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. மிக பிரமாண்டமான ஆழித்தேரில் தியாகராஜர் வீற்றிருக்க 4 வீதிகளில் வீதி உலா வரும் அழகு பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். இந்த ஆண்டு வருகிற 29-ந் தேதி ஆழித்தேரோட்டம் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com