இன்பத்தை தரும் மணி விழா

பெருமை பெற்ற திருக்கடவூர் அமிர்தகடேசுவரர் திருத்தலத்தில் மணிவிழா செய்து கொண்டால், தொடர்ந்து மங்கல விழாக்கள் வாழ்வில் வந்து மகிழ்ச்சியை பெருக்கும்.
இன்பத்தை தரும் மணி விழா
Published on

அறுபது வயதான தம்பதியர்கள், மணிவிழா செய்து கொள்வது வழக்கம். அவரவர்களின் ராசிக்கேற்ப சிலர் வீடுகளில் செய்து கொள்வர். சிலர் ஆலயங்களில் செய்து கொள்வர்.

அங்ஙனம் செய்து கொள்பவர்கள் சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடவூரில் செய்து கொண்டால், ஆயுள் நீடிப்பு உண்டு என்கிறார்கள். ‘கடம்’ என்றால் ‘குடம்’ என்று பொருள். அமிர்த குடத்தை அருளியவர் அமிர்தகடேஸ்வரர். அம்பிகை அபிராமி அம்மன் ஆவார். ‘என்றும் பதினாறு’ என்ற வரம் பெற்ற மார்க்கண்டேயன் உயிரைக் காக்க இறைவன் திருவிளையாடல் நடத்திய தலம் இது.

அபிராமி பட்டருக்காக அமாவாசையன்று, முழுநிலவு வந்ததும் இந்த திருத்தலத்தில் தான். பெருமை பெற்ற திருத்தலத்தில் மணிவிழா செய்து கொண்டால், தொடர்ந்து மங்கல விழாக்கள் வாழ்வில் வந்து மகிழ்ச்சியை பெருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com