நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான முதல் 10 நாள் திருமொழி திருநாளாக பகல்பத்து உற்சவம் தொடங்கியது.
நித்ய கல்யாணப் பெருமாள்
நித்ய கல்யாணப் பெருமாள்
Published on

காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பெருமாளுக்கு பகல்பத்து, ராபத்து உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு முதல் 10 நாள் திருமொழி திருநாளாக பகல்பத்து உற்சவம் நேற்று மாலை தொடங்கியது.

வருகிற 24-ந் தேதி(வியாழக்கிழமை) வரை பகல் பத்து உற்சவம் நடைபெறுகிறது. 25-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ராப்பத்து தொடக்கமாக பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். முடிவில் திருவேடுபறி உற்சவம், நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமுறை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். பகல் பத்து, ராப்பத்து நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளும், பல்வேறு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கைலாசநாதர் நித்ய கல்யாண பெருமாள் கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் நித்திய கல்யாண பெருமாள் பக்த ஜன சபையினர் செய்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com