

கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு கடந்த 6 நாட்களாக சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சாமி உட்பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் விழா குழு தலைவர் சிவசரவணன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.