பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் இன்று தேரோட்டம்

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் இன்று (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
பூதலிங்கசாமி கோவிலில் சுவாமியும் அம்பாளும் கைலாசபர்வத கற்பக விருட்சக வாகனத்தில் வீதி உலா வந்த போது எடுத்த படம்
பூதலிங்கசாமி கோவிலில் சுவாமியும் அம்பாளும் கைலாசபர்வத கற்பக விருட்சக வாகனத்தில் வீதி உலா வந்த போது எடுத்த படம்
Published on

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலும் ஒன்று. காஞ்சியில் நிலமாகவும், திருவானைக்காவில் நீராகவும், திருவண்ணாமலையில் தீயாகவும், காளகஸ்தியில் காற்றாகவும், சிதம்பரத்தில் விண்ணாகவும், சிவபெருமான் வணங்கப்படுகிறார். இந்த பஞ்சபூதங்களும் பூதப்பாண்டி பூதலிங்கசாமியை வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஒவ்வொரு வருடமும், தை, திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் அதன்படி கடந்த 6-ந் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்து வந்தது. 7-ம் திருநாளன்று இரவு சுவாமியும், அம்பாளும் கைலாசபர்வத கற்பக, விருட்சக வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

9-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருத்தேர்களில் விநாயகரையும், சுவாமி, அம்பாளையும் எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8-30 மணிக்கு சுவாமியும் அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு சப்தா வர்ணம் கிகழ்ச்சியும் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com