காணிப்பாக்கம் விநாயகருக்கு ஸ்ரீகாளஹஸ்தி கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்

காணிப்பாக்கம் விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
காணிப்பாக்கம் விநாயகருக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்
காணிப்பாக்கம் விநாயகருக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்
Published on

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் விநாயகருக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்கள் சமர்ப்பணம் செய்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு நடக்கும் காணிப்பாக்கம் விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் நேற்று காலை பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள், வேத பண்டிதர்கள் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com