வந்தவாசியில் அம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் விழா

தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவிலில் இருந்து சீர்வரிசை வழங்கும் விழா லட்சுமண சாமிகள் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் மகா விளக்கு ஏற்றப்பட்டது.
வந்தவாசியில் அம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் விழா
வந்தவாசியில் அம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் விழா
Published on

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்களை வழங்குவதுபோல வந்தவாசி அருகே மாம்பட்டில் உள்ள சர்வ மங்களகாளி மகாசக்தி பீடத்தின் முத்து மாரியம்மனுக்கு, தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவிலில் இருந்து சீர்வரிசை வழங்கும் விழா நடை பெறுவது வழக்கம். அதன்படி 7-ம் ஆண்டு சீர்வரிசை வழங்கும் விழா லட்சுமண சாமிகள் தலைமையில் நடைபெற்றது.

இதையொட்டி சீர்வரிசை பொருட்களான வளையல், பட்டுவஸ்திரம், புஷ்பம், பழவகைகள் ஆகியவை தாய் வீட்டு சீதனமாக தென்னாங்கூர் கோவிலில் இருந்து புறப்பட்டு காஞ்சீபுரம்- வந்தவாசி நெடுஞ்சாலை வழியாக பஸ் நிலையம், பஜார் வீதி, தேரடி, இந்திரா நகர் வழியாக மாம்பட்டு முத்துமாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் மகா விளக்கு ஏற்றப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com