பூவனூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் பூச்சொரிதல் விழா

பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூவனூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் பூச்சொரிதல் விழா
Published on

நீடாமங்கலம் அருகே பூவனூரில் சதுரங்க வல்லப நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. கோவிலின் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பூக்கள் வைக்கப்பட்ட தட்டுகள் மற்றும் கூடைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலம் கோவிலில் நிறைவடைந்தது. அங்கு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் அரவிந்தன், பிரதோஷ கமிட்டியை சேர்ந்த தியாகராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இந்த கோவிலில் வருகிற 2-ந் தேதி காலை 7 மணிக்கு குருபெயர்ச்சி விழா நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com