சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு விழா 15-ந்தேதி நடக்கிறது

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு விழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு விழா 15-ந்தேதி நடக்கிறது
Published on

சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் பணிவிடையும், இரவு வாகன பவனியும், அன்னதானமும் நடைபெறுகிறது.

விழாவில் வருகிற 15-ந் தேதி திருகல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரிப் பதமிடுதலும், 5 மணிக்கு திருநடை திறத்தல், காலை 6 மணிக்கு அய்யாவுக்கு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பணிவிடை ஆகியவை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு தொடங்குகிறது.

நிகழ்ச்சிக்கு பையன் ராஜா தலைமை தாங்குகிறார். சுவாமி, பால் பையன், பையன் காமராஜ், பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பால பிரஜாபதி அடிகளார் விளக்கவுரையாற்றுகிறார்.

இரவு 8 மணிக்கு வாகன பவனியும் தொடர்ந்து பக்தர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், இனிப்பு மற்றும் அன்னதர்மம் வழங்கப்படுகிறது. வருகிற 17-ந் தேதி அய்யாவுக்கு பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com