

இந்த விழா வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் காலை 10 மணிக்கு அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடாகி இரவு வரை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நேற்று பஞ்சப்பிரகார மகா அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை கொள்ளிடம் ஆற்றில் இருந்து பரிவாரங்கள் புடை சூழ மேளதாளங்களுடன் தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு, சமயபுரம் மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து யானை மீது புனித நீர் உள்ள தங்க குடத்தை வைத்து கோவில் அர்ச்சகர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
பஞ்சப்பிரகார மகா அபிஷேகத்தையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு யானை
மீது தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்ட போது எடுத்த படம்.
கோவிலில் வசந்த மண்டபத்தில் உற்சவ அம்மன் முன்பாக புனித நீர் உள்ள குடங்கள் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்யப்பட்டது. மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மகா அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளி விமானத்தில் வெண்ணிற பாவாடை அணிந்து மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று, தங்க கொடி மரம் இரண்டாவது சுற்று, தங்கரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்று, தெற்குரத வீதியில் பாதியும், வடக்கு மாடவாள வீீதியில் நான்காவது சுற்று, கீழரத வீதி, மேலரத வீதி, வடக்குரத வீதி ஐந்தாவது சுற்று என சுற்று பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது.