சபரிமலை கோவிலில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை நாளை நடக்கிறது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.
சபரிமலை கோவிலில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை நாளை நடக்கிறது
Published on

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியில் இருந்து 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். அதே போல் கோவில் திருவிழா நாட்கள், பிரதிஷ்டை தினம், விஷூ பண்டிகை, ஓணம் பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களிலும் பூஜைகள் வழக்கமாக நடந்து வருகிறது.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை நடத்துவார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடை பெறாது.

16-ந் தேதி அதிகாலை முதல் 20-ந் தேதி வரை 5 நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், நெய்யாபிஷேகம் நடை பெறும்.

முன்னதாக பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

நாளை (புதன்கிழமை) பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். வழிபாடுகளுக்கு பின் கோவில் நடை இரவு 10.30 மணிக்கு அடைக்கப்படும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com