

இதையொட்டி வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து சாமிக்கு படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படும். பூஜிக்கப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. பிரசாத நெற்கதிர்களை வீடுகளில் வைத்திருந்தால் வீட்டில் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜையானது நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் நடைதிறக்கப்பட்டது.
பூஜைக்கான நெற்கதிர்கள் கொல்லம் மாவட்டம் அச்சன் கோவிலில் இருந்தும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் இருந்தும் கொண்டுவரப்பட்டன. அவற்றை அச்சன் கோவிலில் இருந்து திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் சேகரித்து ஐயப்பன் கோவிலுக்கு கொண்டுவந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று நெற்கதிர்களை வைத்து நிறைபுத்தரிசி பூஜை நடந்த போது எடுத்த படம்.
பின்னர், நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பூஜையின் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட்டன.
திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவிலிலும் நிறை புத்தரி பூஜை நேற்று அதிகாலையில் நடந்தது. இதையொட்டி பத்மதீர்த்தக்கரையில் இருந்து மேள-தாளம் முழங்க நெற்கதிர் கட்டுகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கிழக்கு நடையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் இந்த நெற்கதிர் கட்டுகள் பத்மநாபசாமிக்கு படைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதம் கோவிலின் 4 நடை பகுதிகளில் உள்ள கவுண்ட்டர்கள் மூலம் வழங்கப்பட்டது.