5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம்

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் வருகிற 3-ந்தேதி தொடங்கி ஜூன் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
புன்னைநல்லூர் மாரியம்மன்
புன்னைநல்லூர் மாரியம்மன்
Published on

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்தது புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில். இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்படும். இந்த கோவிலில் உள்ள மூலஸ்தான அம்மன் சிலை புற்றுமண்ணால் ஆனதால் அபிஷேகங்கள் செய்யப்படுவது இல்லை. தைலக்காப்பு மட்டும் சாற்றப்படுகிறது.

இந்த கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மனுக்கும், உற்வச மூர்த்தி அம்மனுக்கும் நித்தியப்படி அபிஷேகம் நடைபெறும். மூலஸ்தான அம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி 5 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு தைலக்காப்பு அபிஷேகம் வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூன் மாதம் 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் கோவிலில் தைலக்காப்பு அபிஷேகம் முடியும் வரை பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரண்மனை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com