புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் தொடங்கியது

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் தொடங்கியது. அடுத்த மாதம் (ஜூன்) 16-ந் தேதி வரை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
புன்னைநல்லூர் மாரியம்மன்
புன்னைநல்லூர் மாரியம்மன்
Published on

தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மாரியம்மன் சிலை புற்று மண்ணால் ஆனதாகும்.

இதனால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறாது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அப்போது அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அர்ச்சனை நடைபெறும். மூலஸ்தான அம்மனுக்கு 48 நாட்களும் 2 வேளை சாம்பிராணி தைலம், புனுகு, ஜவ்வாது உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெறும்.

தைலக்காப்பின்போது அம்மனுக்கு வெப்பம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அதை தவிர்க்க தயிர்பள்ளயம், இளநீர் போன்ற விசேஷ நைவேத்தியங்கள் படைக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தைலக்காப்பு அபிஷேகம் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஜூன்) 16-ந் தேதி வரை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com