இறந்தவர்களுக்கு திதி செய்யலாமா? காக்கையை பித்ருக்களின் தூதுவர்

காக்கையை நம் பித்ருக்களின் தூதுவர் என்னும் நம் நம்பிக்கையின் சாரமென்ன? அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.
இறந்தவர்களுக்கு திதி செய்யலாமா? காக்கையை பித்ருக்களின் தூதுவர்
Published on

உங்கள் அப்பாவோ தாத்தாவோ இறந்து விட்டார்கள். உயிரோடு இருந்த போது உங்களுக்கும் அவர்களுக்குமான உறவுகள் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். உங்களுக்கு சொத்தோ, வேறு வசதிகளோ செய்து கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் மூலமாகத்தான் நீங்கள் இந்த உடலைப் பெற்றீர்கள். அவர்கள் உங்களுக்கு உயிரைக் கொடுக்கவில்லை என்றாலும் இந்த உடலைக் கொடுத்தார்கள்.

ஆனால், அவர்களை நீங்கள் தினமும் நினைவுக்குக் கொண்டு வருவதில்லை, ஏற்கனவே, அவர்களை ஆணியில் அடித்து சுவற்றில்தொங்க விட்டு விட்டீர்கள். குறைந்தபட்சம் அவர்களைப் பற்றிவருடத்துக்கு ஒரு முறையாவது நினைக்கலாம். அவர்கள் பெயரில் ஏதோ ஒன்று நீங்கள் செய்யலாம். அவர்களுக்கு உங்கள் உணவோ அல்லது வேறு எதுவுமோ தேவை இல்லை. அவர்கள் பெயரில் நீங்கள் அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். அப்போது காகம், பசு போன்றவற்றுக்கும் சிறிது உணவைக் கொடுங்கள். எப்போதும் நீங்கள் காகத்தைத் துரத்தியடிக்கிறீர்கள். குறைந்த பட்சம் ஒரு நாளாவது அவற்றுக்கு உணவு அளியுங்கள். அதுவே உங்களிடம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

எப்படியும் நீங்கள் சமைக்கிறீர்கள். காகம், பசு போன்றவற்றுக்கு உணவு அளிக்கிறீர்கள். அப்போது உணவு தேவைப்படும் பலருக்கோ சிலருக்கோ சேர்த்து நீங்கள்உணவளிக்கலாம். உறவினர்கள் அவசியம் இல்லை. அவர்கள் ஏற்கனவே நன்கு சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

எனவே, அந்தச் சடங்கை நடத்தினால், சமைத்து மற்றவருக்குப் பரிமாறுங்கள், அல்லது நீங்கள் சாப்பிடுங்கள். எப்படியும் உங்கள் அப்பா வந்து சாப்பிடப் போவதில்லை. உயிருடன் இருந்த வரை, அவருக்கு உணவு தேவையாக இருந்தது. இப்போது அவருக்கு உணவு தேவை இல்லை. அப்பாவின் பெயரில் உணவு தேவைப்படும் சிலருக்கு உணவளிக்கலாம். இப்படிச் செய்தால், உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தி அடையுமோ அடையாதோ, அது நமக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக உங்கள் ஆத்மா சிறிது சாந்தி அடையும்.

அதுதான் மிகவும் முக்கியமானது. இது போன்ற பணிகளைத் தான் நீங்கள் செய்ய வேண்டும். இந்த நோக்கில் தான் முன்பு சடங்குகள் உருவாக்கப்பட்டன.

யாருக்கோ எதன் பெயரிலோ கொடுப்பது தானே வாழ்க்கை. அதை சடங்காக அல்ல, வாழ்க்கையாக்கி கொள்ளுங்களேன்!

உண்மையில் ஒருவர் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் முன், இந்த புரிதலில் இருந்துதான், அந்த அனுபவத்துடன் தான், வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அத்தகைய வாய்ப்பு இப்போது இல்லாமல் போய் விட்டது. ஏனெனில் இப்போது மந்திரம் வழங்குபவருக்கும் அந்த மந்திரத்தைப் பற்றித் தெரியவில்லை. இந்த செயல் முறையைப் பெறும் குழந்தைக்கும் நிச்சயமாகத் தெரிய வாய்ப்பில்லை. தற்போது இது ஒரு வெறும் சடங்காக, ஒரு நூல் உடலைச் சுற்றிப் போடுவதுடன் முடிந்து விடுகிறது.

அந்த வயதில் எதற்காக செய்யப்படுகிறது என்றால் 13 அல்லது 14 வயதில் சிறுவர்கள் ஆண், பெண் உறவு பற்றி மெதுவாக தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அப்போது அவர்களுடைய மனம் பல திசைகளிலும் அலைபாய ஆரம்பிக்கிறது. எனவே அந்த வயதிற்கு முன்பாகவே, அவர்கள் தாங்கள் யார் என்பதை உணர்ந்து கொண்டு விட்டால், பிறகு வாழ்க்கையின் எந்தப் பரிமாணத்தில் அடியெடுத்து வைத்தாலும், அவர்களுடைய செயல்பாடுகள் சரியான கோணத்தில் இருக்கும். அதிகப் பேராசை அல்லது காமம் இவற்றால் பாதிக்கப்பட்டு எந்த செயல் செய்ய மாட்டார்கள். அவர்களுடைய செயல்களின் தன்மை முற்றிலும் வேறுவிதமாக இருக்கும்.

ஆண், பெண் என்ற இருமையில் சிக்கிக் கொள்ளாதிருக்கும் போது, தெய்வீகத்தை உணர்வது மிகவும் சுலபம். நீங்கள் ஆண், பெண் என்ற இருமையில் சிக்கிக் கொண்டு விட்டால் பிறகு உங்கள் பால் அடையாளங்களை மறக்கடிக்க பல செயல்கள் செய்ய வேண்டியது இருக்கிறது. அப்படியும் அந்த உணர்வு உங்களுக்கு திரும்பத் திரும்ப வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com