காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம்

நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் அமைந்துள்ள சென்றாய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் திருக்கோடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம்
காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம்
Published on

நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் அமைந்துள்ள சென்றாய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை மற்றும் திருக்கோடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. உற்சவர் சென்றாய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் கோவில் வளாகத்தில் உள்ள வீரபக்த ஆஞ்சநேயர் சாமி வெள்ளிகவசத்தால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் காளிப்பட்டி, முத்தனம்பாளையம், தப்பக்குட்டை, சின்ன திருப்பதி, செம்மண்திட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவில் பங்காளிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com