வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா

வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருத்தல பெருவிழா, கொடியேற்றத்துடன் எளிமையாக தொடங்கியது.
பரலோக அன்னை
பரலோக அன்னை
Published on

வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருத்தல பெருவிழா, கொடியேற்றத்துடன் எளிமையாக தொடங்கியது. தொடர்ந்து முதல் திருப்பலி, திருயாத்திரை திருப்பலி, ஜெபமாலை நடந்தது. பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, கொடியேற்றினார். காவல்கிணறு பங்குத்தந்தை ஆரோக்கியராஜ், வடக்கன்குளம் உதவி பங்குத்தந்தை மார்ட்டின் உள்பட குறைந்த எண்ணிக்கையிலான பங்கு மக்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக ஞானதிரவியம் எம்.பி. கலந்துகொண்டார்.

வருகிற 14-ந் தேதி காலை 9 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியும், மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உதவி பங்குத்தந்தை பிணித்து ராஜா மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com