பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவாடிப்பூர விழா

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவாடிப்பூர விழாவில், நேற்று ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவாடிப்பூர விழா
Published on

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவாடிப்பூர விழா நடைபெற்று வருகிறது. விழாவில், நேற்று ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள், அப்பம் ஆகியவை வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதனை குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணி ஆகியோர் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (வியாழக் கிழமை) பஞ்சமூர்த்தி புறப்பாடு, கிரிவீதி உலா நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com