கரும்பாட்டூர் நாராயண சுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

தென்தாமரைகுளத்தை அடுத்துள்ள கரும்பாட்டூரில் ஊர் வகை ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திய கொடிமரம் பிரதிஷ்டை
திய கொடிமரம் பிரதிஷ்டை
Published on

தென்தாமரைகுளத்தை அடுத்துள்ள கரும்பாட்டூரில் ஊர் வகை ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு ஊர்த்தலைவர் தங்கத்துரை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சேகர், செயலாளர்கள் மணிகண்ட ராஜா, கேசவன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ரூ.6 லட்சம் செலவில் 37 அடி உயரத்தில் செய்யப்பட்ட புதிய கொடிமரம் மேளதாளம் முழங்க பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அய்யா அரகர அரகரா, சிவ சிவா, சிவ சிவா என்ற பக்தி கோஷமிட்டனர்.

இதில் ஊர் பொருளாளர் கண்ணன், அஜித் முன்னாள் ஊர்தலைவர்கள் தினகரன், ஹரிதாஸ் தாமரைகுளம் பதி குரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு இனிமம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com