

சித்திரை விசு மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகமும், இரவு 7 மணிக்கு புதிய வருடத்துக்கான பஞ்சாங்கம் வாசித்தலும் நடைபெறுகிறது.
ஆனால் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், கோவிலில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்களை தவிர மற்ற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கோவில் பணியாளர்களும் கோவிலில் சமூக இடைவெளியை கடைபிடித்து தான் இருப்பார்கள் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.