நாகநாத சுவாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது

திருச்சி நந்திகோவில் தெரு நாகநாத சுவாமி கோவிலில் வருகிற 2-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது.
நாகநாத சுவாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது
Published on

திருச்சி தெப்பக்குளம் நந்தி கோவில் தெருவில் ஆனந்தவல்லி உடனுறை நாக நாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சி களும், இந்து சமய ஆகம விதிகளின் படி பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9.31 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை யொட்டி நாகநாத சுவாமி கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு பரிகார ஹோமம் மற் றும் பூஜைகள் நடைபெறுகிறது.

அதன்படி 2-ந்தேதி காலை 6.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யா கவாசனம், 7 மணிக்கு வேதி கார்ச்சனை, ஞானகுரு, தேவ குரு மூலமந்திரம், மாலா மந்திரம், குரு காயத்திரி ஹோமங்கள் நடைபெறும்.

காலை 8.30 மணிக்கு பூர்ணாஹூதி, 9 மணிக்கு மகா அபிஷேகம், 9.30 மணிக்கு மஹா தீபாராதனை, 10 மணிக்கு பிரசாதம் வழங்கு தல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த குருப்பெயர்ச்சியால் ரி‌ஷபம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பரிஹார ஹோமத் தில் கலந்துகொள்ள விரும்பு பவர்கள் தங்களின் பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை கோவில் அலுவலகத்தில் பதிவு செய்து ரூ.150 பணம் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

குருப்பெயர்ச்சி விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையரு மான நா.சுரேஷ், செயல் அலுவலர் த.ஜெயலதா மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com