குழந்தை முத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

காட்டுமன்னார்கோவில் குழந்தை முத்து மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காட்டுமன்னார்கோவில் குழந்தை முத்து மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.
காட்டுமன்னார்கோவில் குழந்தை முத்து மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் குழந்தை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தீ மிதி திருவிழா கடந்த 14-ந்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் 16-ந்தேதி தேரோட்டமும், கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காட்டுமன்னார்கோவிலில் உள்ள முருகன் கோவிலில் இருந்து பக்தர்கள் செடல் எடுத்தும், பால்குடம் சுமந்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் குழந்தை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை யடுத்து மாலையில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் காப்பு கட்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com