அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா

அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா
Published on

அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. நாட்டில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், கடலில் மீன்வளம் பெருக வேண்டியும் இந்த கோவிலில் முளைப்பாரி திருவிழா நேற்று நடை பெற்றது.

இதையொட்டி ஏராளமான பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு கொழுக்கட்டை படையல் இட்டு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் முளைப்பாரிகளை கடற்கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர் முளைப்பாரிகள் கடலில் விடப்பட்டன. விழாவையொட்டி அன்ன தானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com