பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் என்ன பலன்

ஒவ்வொரு சுப நிகழ்ச்சியின் போது பிள்ளையார் பிடித்து வைப்பதை காண்கிறோம். ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.
மஞ்சள் விநாயகர்
மஞ்சள் விநாயகர்
Published on

ஒவ்வொரு சுப நிகழ்ச்சியின் போது பிள்ளையார் பிடித்து வைப்பதை காண்கிறோம். ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். அவை....

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.

புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்,விவசாயம் செழிக்கும்

வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.

உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.

வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி,சூனியம் விலகும்.

விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்

வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்

வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்

சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com