மாகாளி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா

அவினாசிக்கவுண்டம்பாளையத்தில் மாகாளி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக பெருவிழா நாளை (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ளது.
மாகாளி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா
Published on

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த அவினாசி கவுண்டம்பாளையம் மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந்தேதி நடைபெற்றது. இதையொட்டி 12 நாட்கள் தினமும் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. மண்டல பூஜையின் நிறைவு விழாவாக மகாசண்டியாக பெருவிழா மற்றும் 108 சங்காபிஷேக விழா பெருவிழா நாளை (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ளது.

தொடர்ந்து விழாவில் மாகாளி அம்மனுக்கு சப்தசதி என்ற 700 மந்திரங்கள் மற்றும் 12 அத்தியாய பாராயணத்துடன் விழா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com