மகாளய பட்சத்தில் அன்னதானம் செய்யுங்கள்

மகாளய பட்சத்தின் மிக முக்கிய அம்சமே அன்னதானம் செய்ய வேண்டும் என்பது தான். அன்னதானத்தை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து நின்று செய்தால் அதனால் அதிக பலன்கள் கிடைக்கும்.
மகாளய பட்சத்தில் அன்னதானம் செய்யுங்கள்
Published on

மகாளய பட்சத்தின் மிக முக்கிய அம்சமே அன்னதானம் செய்ய வேண்டும் என்பது தான். அன்னதானத்தை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து நின்று செய்தால் அதனால் அதிக பலன்கள் கிடைக்கும்.

அன்னதானம் செய்யும் போது சாதி, மத குல வேறுபாடுகள் எதையும் பார்க்ககூடாது. அன்னதானம் பெற வரும் ஒவ்வொருவரையும் தங்களது முன்னோர்களாக கருத வேண்டும்.

மேலும் ஏழைகளுக்கு அன்னத்தை தானம் செய்யும் போது, உங்கள் பித்ருக்களை மனதில் தியானம் செய்து கொண்டே மிக, மிக பணிவுடன் செய்ய வேண்டும். அன்னதானம் செய்கிறோம் என்ற அகந்தை மனதுக்குள் துளி அளவு கூட வந்து விடக்கூடாது. அதுவும் அன்னத்தை குடும்பத்து பெண்கள் தங்கள் கைப்பட சமைத்து வழங்கி இருந்தால், அந்த பெண்களுக்கு அபரிதமான பலன்கள் கிடைக்கும்.

அன்னதானத்துடன் பித்ரு காரியங்களுக்கு உரியதாக கருதப்படும் எள் உருண்டை, அதிரசம், பணியாரம், தேன்குழல், உளுந்து வடை, தேங்காய்பால், பால்பழம், சுசீயம், மாவு உருண்டை மற்றும் இனிப்பு வகைகளையும் சேர்த்து கொடுக்கலாம். சிலர் தங்கள் மூதாதையர்களுகு பிடித்த உணவு வகைகளை அன்னதானத்துடன் சேர்த்து வினியோகம் செய்வார்கள்.

இவையெல்லாம் பித்ருக்களை முழுமையான அளவில் திருப்திப்பட வைக்கும். கர்ணன் தானம் செய்வதற்காகவே பிறந்தவன். யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் அவன் தானம் செய்ததாக மகாபாரத்தில் உள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமான அவன் தன் வாழ்நாளில் அன்னதானம் செய்யவில்லை. அவன் மரணம் அடைந்ததும், அவன் மீது இரக்கப்பட்ட எமன், கர்ணா நீ பூலோகத்துக்கு மீண்டும் சென்று அன்னதானம், தர்ப்பணம், சிரார்த்தும் முதலியவற்றை செய்து விட்டு வா என்று அனுப்பினான். அதன் படி கர்ணன் பூமிக்கு வந்து அன்னதானம் செய்தார்.

பூமியில் அவர் 14 நாட்கள் தங்கி இருந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த 14 நாட்கள் தான் மகாளய பட்ச தினங்களாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com