செம்பனார் கோவில் அருகே மருதூர் ராஜராஜேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா

மயிலாடுதுறை தேவநாயகி- ராஜராஜேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
செம்பனார் கோவில் அருகே மருதூர் ராஜராஜேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா
செம்பனார் கோவில் அருகே மருதூர் ராஜராஜேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா
Published on

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கருவாழக்கரை அருகே மருதூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் தேவநாயகி- ராஜராஜேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

விழாவையொட்டி வேத விற்பன்னர்கள் சிவ சஹஸ்ரநாமம் வாசிக்க, சிவாச்சாரியார்கள் பல விதமான மலர்களை கொண்டு சிவ பெருமானுக்கு அர்ச்சனை செய்தனர்.

பத்து முறை நடைபெற்ற அர்ச்சனைக்கு பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com