சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது
Published on

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலான இங்கு சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன்தொடங்கியது.

கொடியேற்று நிகழ்ச்சியில் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் முன்பு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் தங்க இந்திர விமானம், வெள்ளி சூரியபிரபை, வெள்ளி சேஷ வாகனம், ஓலைச்சப்பரத்துடன் கூடிய தங்க கருட வாகனம், வெள்ளி அனுமந்த வாகனம், வெள்ளி யானை வாகனம், பின்னை மர வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. அதைத்தொடர்ந்து தீர்த்தவாரி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com