கார்த்திகை மாதம் கந்தனை வழிபடுங்கள்

கார்த்திகையில் விளக்கேற்றி வழிபடுவது தொன்று தொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.
Published on

கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள். ஆறு அருட்சுடர் சரவணப் பொய் கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.

சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஒரு உருவாய் ஆறுமுகக் குழந்தையாய் தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது. 

அப்போது கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர். சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி உங்களுக்கு மங்களம் உண்டாகுக. உங்களால் வளர்க்கப்பட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம். 

உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டவதாக என்று திருவாய் மலர்ந்தருளினார். எனவே கார்த்திகையில் விளக்கேற்றி வழிபடுவது தொன்று தொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com