காரமடை காமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா

காரமடை காந்தி மைதானம் பாவடியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாண விழா நடைபெற்றது.
மணக்கோலத்தில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன்.
மணக்கோலத்தில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன்.
Published on

காரமடை காந்தி மைதானம் பாவடியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று காலை 10 மணிக்கு ஆனி திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பகல் 12 மணிக்கு ஏகாம்பரேஸ்வரர் சுவாமிக்கும், காமாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாண விழா நடைபெற்றது.

இதையொட்டி காரமடை கிழக்கு ரத வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் கல்யாண சீர்வரிசை தட்டுகள் எடுத்து, தெற்கு ரத வீதி வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.பின்னர் கோவில் வளாகத்தில் மணக்கோலத்தில் வீற்றிருந்த ஏகாம்பரேஸ்வர சுவாமிக்கும், காமாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாண விழா தொடங்கியது.

சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். அதைத்தொடர்ந்து மதியம் 12.40 மணிக்கு ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். அங்கு கூடியிருந்த பெண்களுக்கு திருமாங்கல்ய சரடுகள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com