அமர்ந்த நிலையில் காரைக்கால் அம்மையார்...

நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மட்டும்தான் அமர்ந்த நிலையில் காட்சி தருவார். மற்ற அனைவரும் நின்ற நிலையில்தான் இருப்பார்கள்.
காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்
Published on

அறுபத்து மூன்று நாயன்மார்களில், காரைக்கால் அம்மையார் மட்டுமே பெண் ஆவார். அது மட்டுமின்றி நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மட்டும்தான் அமர்ந்த நிலையில் காட்சி தருவார். மற்ற அனைவரும் நின்ற நிலையில்தான் இருப்பார்கள்.

பிரிந்து சென்ற கணவரை பாண்டிய நாட்டுக்கு தேடிச்சென்றபோது, கணவர் தன் குடும்பத்தோடு காரைக்கால் அம்மையாரின் காலில் விழுந்து வணங்கினார். இது அம்மையாருக்கு மனசங்கடத்தை அளித்தது. அதன்பிறகுதான் பேய் உருவம் பெற்று கயிலாயம் சென்றார்.

அங்கு இறைவனே இவரை ‘அம்மையே வருக.. அமர்க..’ என்று கூறினார். இறைவனே அம்மையை அமரச் சொல்லியதால், நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com