காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம்

சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் இரவு வாடாயாத்து பிரம்மோற்சவ விழா கொடியிறக்க நிகழ்ச்சி உற்சவத்தில் விநாயகர் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காணிப்பாக்கம் விநாயகர் கோவில்
காணிப்பாக்கம் விநாயகர் கோவில்
Published on

சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 10-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம், மதியம் அபிஷேகம் ஆகியவை நடந்தது.

இரவு வாடாயாத்து உற்சவத்தில் விநாயகர் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து ஏகாந்த சேவை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழாவின் 11-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை மூலவர், உற்சவருக்கு அபிஷேகம், இரவு அதிகார நந்தி வாகன உலா நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com