கைலாசநாதர் கோவில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை சந்திப்பு கைலாசபுரம் சவுந்தரவல்லி சமேத கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கைலாசநாதர் கோவில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

நெல்லை சந்திப்பு கைலாசபுரம் சவுந்தரவல்லி சமேத கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 8 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது. வருகிற 23-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com