கன்னியாகுமரிதூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நடந்தது. விழாவில் முதல்நாள் ஜெபமாலை, ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆராதனை ஆகியவை நடந்தது.
திருவிழாவில் நற்கருணை பவனி நடந்தபோது எடுத்தபடம்.
திருவிழாவில் நற்கருணை பவனி நடந்தபோது எடுத்தபடம்.
Published on

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறும். இந்த மாதத்தில் மீன்கள் அதிகமாக கிடைத்து வந்ததால் தேர் திருவிழா நடத்துவதில் சிரமம் இருந்தது. இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்துக்கு திருவிழா மாற்றப்பட்டது.

இருப்பினும் பாரம்பரியமாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் 2 நாட்கள் மட்டும் “தேதிப்படி“ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.

விழாவில் முதல்நாள் காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆராதனை ஆகியவை நடந்தது. 2-ம் நாளான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனி, மறையுரை நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ஆன்டனி அல்காந்தர், இணை பங்குத்தந்தையர்கள் ஜெபமெர்ஜின், கிங்ஸ்லி சாஜூ, துணை பங்கு தந்தை ஜேக்கப் ஆஸ்லின், பேரவை தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் ஆன்டரின் செல்வகுமார், துணைச்செயலாளர் தினகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com