

சென்னை, கோபாலபுரத்தில் வேணுகோபாலசாமி கோவில் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை, கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த 5-ந் தேதி தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதில் கிருஷ்ணருக்கும், ராதைக்கும் நடக்கும் ‘ராதா கல்யாணம்’ என்ற முக்கிய நிகழ்ச்சியையொட்டி வரும் 29-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியும், 30-ந் தேதி திருமண நிகழ்ச்சியும் நடக்கிறது. கார்த்திக் ஞானேஸ்வர் பாகவதர் ராதா கல்யாணத்தை நடத்துகிறார். தொடர்ந்து அடுத்த மாதம் 14-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இரவு 12 மணிக்கு கிருஷ்ணருக்கு விசேஷ அபிஷேகமும், ஆரத்தியும் நடக்கிறது.
அதேபோல் விநாயகர் சதுர்த்தி விழா 16-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வாசு உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.