எல்லைப்பிடாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் விமான அலகு குத்தி நேர்த்திக்கடன்

சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் விழாவையொட்டி பக்தர்கள் விமான அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் விமான அலகு குத்தி வந்த போது எடுத்த படம்.
எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் விமான அலகு குத்தி வந்த போது எடுத்த படம்.
Published on

இதன் தொடர்ச்சியாக நேற்று கோவிலில் பொங்கல் வைத்தல், அலகு குத்துதல் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோவில் அருகிலும், அரசு கலைக்கல்லூரி வளாகத்திலும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

சிலர் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து பெண்களும், ஆண்களும் அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். சில பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி விமான அலகு குத்தியபடி வந்தனர். மேலும் சிலர் கிரேனில் தொங்கியவாறு முதுகில் அலகு குத்தியபடி வந்தனர். இதைப்பார்க்க ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.


கோவில் விழாவையொட்டி பெண்கள் பொங்கல் வைத்த போது எடுத்த படம்.

இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு பால்குடம், மாலை 4.30 மணிக்கு வண்டி வேடிக்கை, நாளை மறுநாள் (சனிக்கிழமை) சத்தாபரணம் நடைபெறுகிறது. பொங்கல் வைபவம், அக்னி குண்டம் நிகழ்ச்சியையொட்டி கோவில் வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com