குழந்தை பாக்கியம் அருளும் திண்டல் முருகன்

ஈரோட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திருத்தலம்.இந்த ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
குழந்தை பாக்கியம் அருளும் திண்டல் முருகன்
Published on

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் என்ற இடத்தில் சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொல்மொழிக்கு ஏற்ப, இந்த ஆலயமும் முருகனின் அருள் ஆலயங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடிக்கிறது.

இந்த ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். புத்திரப்பேறு இல்லாதவர்கள், இத்தல முருகனுக்கு அபிஷேகம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில், திண்டல் திருத்தலம் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com