இழந்து போன செல்வங்களை அருளும் குபேர யாகம்

தீபாவளியன்று லட்சுமி குபேரபூஜை செய்வது உத்தமம் அவ்வாறு செய்தால் இழந்து போன செல்வங்களையும் வாழ்வில் அனைத்து வளங்களையும் ஒருங்கே பெறலாம்.
இழந்து போன செல்வங்களை அருளும் குபேர யாகம்
Published on

தீபாவளியன்று லட்சுமி குபேரபூஜை செய்வது உத்தமம் அவ்வாறு செய்தால் இழந்து போன செல்வங்களையும் வாழ்வில் அனைத்து வளங்களையும் ஒருங்கே பெறலாம் என புராண நூல்களில் கூறப்பட்டுள்ளன.

வீட்டில் லட்சுமி, குபேரன் படங்களை பூக்களால் அலங்கரித்து பூஜை செய்யலாம். ஒருசில சிவாலயங்களில் குபேரனுக்கு தனி சன்னதி இருக்கும். அங்கு சென்று வழிபடுவதும் நல்ல பலனை தரும். தீபாவளியன்று கோவில்களில் குபேரனுக்கு பால், இளநீர், தயிர், மஞ்சள் போன்ற 11 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பக்தர்கள் பழங்கள் மற்றும் அபிஷேக பொருட்களை வழங்கலாம்.

தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது தஞ்சபுரீஸ்வரர் கோவில். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோவில்களுள் ஒன்றானஇந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று யாகம் நடைபெறும். அதில் குபேரன் தான் இழந்த செல்வங்கள், சக்திகளை திரும்பப்பெற்ற ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று நடைபெறும் மகா குபேர யாகம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.

அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி மாத அமாவாசை தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான வருகிற 19-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மகா குபேர யாகம் நடக்கிறது.

இதில் ஹோம பொருட்கள், பழங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களான திரவியப்பொடி, மஞ்சள் பொடி போன்றவைகளுடன் மகா குபேர யாகத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு தஞ்சபுரீஸ்வரர்-ஆனந்தவல்லி அம்மன், குபேரன், குபேர மகாலட்சுமியை வழிபாடு செய்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com