வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்ட ஸ்லோகம்

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுபவர்கள், புதிதாக தொழில் தொடங்குபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்ட ஸ்லோகம்
Published on

கிரீட மகுடோபேதாம் ஸ்வர்ணவர்ண ஸமன்விதாம்

ஸர்வாபரண ஸம்யுக்தாம் ஸுகாஸன ஸமன்விதாம்

பரிபூர்ணம்ச கும்பம்ச தக்ஷிணேந கரேணது

சக்ரம் பாணம்ச தாம்பூலம்த தாவாம கரேணது

சங்கம் பத்மம்ச சாபஞ்ச கண்டிகாமபி தாரிணீம்

ஸத்கஞ்சுக ஸ்தனீம் த்யாயேத் தனலக்ஷ்மீம் மனோஹராம்.

தனலட்சுமி தியானம்

பொதுப் பொருள்:

நிறைந்த அழகு கொண்ட பொன்னிற மேனியை உடையவளே. சகல அணிகலன்களும் அணிந்திருப்பவளே. மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒளிமயமான மண்டபத்தில் திகழ்பவளே. நிறைகுடம், சக்கரம், அம்பு, வெற்றிலை, சங்கு, தாமரை, வில், ஏந்தியருளும் அழகே உருவான தனலட்சுமியை வணங்குகிறேன். வணங்குவோர்க்கு தனம் எனும் செல்வச் செழிப்பை அருள்பவளே தங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

- வியாபாரிகள் வெள்ளிக் கிண்ணத்தில் காசுகளை வைத்து அதையே தனலட்சுமியாக வழிபடலாம். வழிபட்ட காசிலிருந்து சில நாணயங்களை எடுத்துச் சென்று வியாபாரம் தொடங்க மிகுந்த லாபம் கிட்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com