இவருக்கு செவ்வாய் ஓரையில் தீபம் ஏற்றினால் கடன் பிரச்சனைகள் தீரும்

நமக்கு கடன் தொல்லைகள், பகைவர் தொந்தரவுகள், தீராத நோய்கள் என்று ஏதாவது ஒரு துன்பங்கள் வந்து கொண்டு இருக்கும். அதற்கான தீர்வை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இவருக்கு செவ்வாய் ஓரையில் தீபம் ஏற்றினால் கடன் பிரச்சனைகள் தீரும்
இவருக்கு செவ்வாய் ஓரையில் தீபம் ஏற்றினால் கடன் பிரச்சனைகள் தீரும்
Published on

ஒருவருக்கு ஜாதகத்தில் தன்னுடைய கர்ம வினைகளை அனுபவித்து ஆக வேண்டும் என்பதற்காக சில கிரகங்கள் ஒன்றாக இணையும் சமயத்தில் நமக்கு கடன் தொல்லைகள், பகைவர் தொந்தரவுகள், தீராத நோய்கள் என்று ஏதாவது ஒரு துன்பங்கள் வந்து கொண்டு இருக்கும். அதற்கான தீர்வை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

குடும்பத்தில் பிரச்சனை, வருமான தடை, உடல் நிலை பாதிப்புகள் என்று ஏதாவது ஒரு சிக்கல்களில் மாட்டிக் கொண்டு வாங்கிய கடனுக்கு வட்டியை கூட செலுத்த முடியாத சூழ்நிலையில் பரிதவித்து நிற்பார்கள். இது போன்றவர்களுக்கு எம்பெருமான் முருகப் பெருமான் துணையாக இருப்பார்.

முருகனை அன்றி நம் பாரத்தை தாங்க கூடியவர்கள் வேறு யாருமில்லை. கடன் என்ற சுமையை முருகப் பெருமானிடம் இறக்கி வைத்து விடுங்கள். குறிப்பாக திருச்செந்தூர் மற்றும் பழனி முருகனை செவ்வாய் ஹோரையில் வணங்கி விட்டு கடனை செலுத்தினால் கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம். -

அதே போல் சரபேஸ்வரர் சன்னதியில் இந்த விளக்கு ஏற்றி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். சரபேஸ்வரர் பக்தர்களின் துன்பம் தீர்க்க இன்றும் கோவில்களில் அருள் பாலிக்கின்றார். உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் திருத்தலங்களில் சரபேஸ்வரர் சந்நிதியை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய் ஹோரை நேரத்தில் அங்கு சென்று இந்த தீபத்தை ஏற்றுங்கள். நிச்சயம் உங்களுடைய எப்பேற்பட்ட கடனும் விரைவாக தீர்ந்து விடும். செவ்வாய், சனி கிரக சேர்க்கையால் நீங்கள் படும் துன்பங்கள் தீரும். அத்துடன் கர்ம வினை பாவங்களும் நீங்கும். அந்த விளக்கு எப்படி போடுவது என்பதை பார்ப்போம்.

9 அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் வாழை தண்டு நார் மூலம் உருவாக்கப்பட்ட திரிகளை போட்டு ஏழு ஏலக்காய்களை நுணுக்கி விளக்குகளில் சிறிது சிறிதாக போட்டுக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை சரபேஸ்வரர் சன்னிதியில் ஏற்றி வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வாருங்கள். சரபேஸ்வரரின் அருள் இருந்தால் உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லைகள் சுலபமாக நீங்கி விடும். சரபேஸ்வரரை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கபட்டவர்கள் நலம் பெறுவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com