சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம்

சித்திரை திருவிழாவில் நேற்று மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூடி, நவரத்தின செங்கோலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூடி, நவரத்தின செங்கோலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
Published on

அதன்படி மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை நினைவுபடுத்தும் வகையில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா நடந்தது. இந்த விழா மாலை 6.30 மணியளவில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ‘ராயர் கிரீடம்’ எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

கோவிலில் உள்ள விநாயகரிடம் இருந்து செங்கோலும், கிரீடமும் பெறப்பட்டு இரவு 7.05 மணியளவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டப்பட்டது. அப்போது மஞ்சள் நிற பட்டுப்புடவை அணிந்திருந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. வேப்பம்பூ மாலையும், மகிழம் பூ மாலையும் அணிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நவரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோலும், மீன் கொடியும் மீனாட்சி அம்மனுக்கு வழங்கப்பட்டன. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.


சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனிடம் பெற்ற செங்கோலை கோவில் சிவாச்சாரியார்கள் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கியபோது எடுத்தபடம்.

மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல், அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் சிவாச்சாரியார்கள் வழங்கினர். அவர் செங்கோலை பெற்றுக்கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை கொடுத்தார். இதையடுத்து, மீனாட்சி அம்மனை பக்தர்கள் கை பாரமாக தூக்கிக்கொண்டு பழைய கல்யாண மண்டபத்துக்கு சென்றனர். அங்கு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனை அமர வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர். இதைத்தொடர்ந்து மதுரையில் இன்று முதல் மீனாட்சி ஆட்சி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com