சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு

நாகை மாவட்டம் சிக்கலில் உள்ள சிங்கார வேலவர் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு
Published on

நாகை மாவட்டம் சிக்கலில் உள்ள சிங்கார வேலவர் கோவிலில் நேற்று ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி இந்த சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அமிர்தகரசுப்பிரமணிய சுவாமிக்கு பால் உள்பட பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன.

தோப்புத்துறை கைலாசநாதர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன்கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com