செவ்வாய் தோஷத்தை எப்படி வெல்வது

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமண தடை ஏற்படும். எனவே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை முறையாக செய்து வந்தால் பலன் அடையலாம்.
செவ்வாய் தோஷத்தை எப்படி வெல்வது
Published on

1. செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.

2. கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.

3. செவ்வாய்க்கிழமைகளில் உண்ணாவிரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, செவ்வாய் தோஷக்காரர்கள் துவரம் பருப்பை மட்டுமே உண்ணலாம்.

4. செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.

5. செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.

6. செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணியலாம்.

7. இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com