ஸ்ரீமுஷ்ணம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை

ஸ்ரீமுஷ்ணம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.
ஸ்ரீமுஷ்ணம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

ஸ்ரீமுஷ்ணம் சந்தைதோப்பில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மயானக்கொள்ளை நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து அன்று இரவு கோவிலில் மகாசிவராத்திரி உற்சவம் நடந்தது. பின்னர் நேற்று காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை நடந்தது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மன் அருமைசெட்டிக்குளக்கரை அருகில் உள்ள மயானத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து சுடுகாட்டு சாம்பலால் செய்யப்பட்ட அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு, பல்வேறு வகையான பொருட்களால் படையல் வைக்கப்பட்டு, மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தீமிதி திருவிழாவும், 16-ந் தேதி திருக்கல்யாணம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com