பெண்ணாடம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா

பெண்ணாடம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெண்ணாடத்தில் மயானக்கொள்ளை நடைபெற்றபோது எடுத்த படம்.
பெண்ணாடத்தில் மயானக்கொள்ளை நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

பெண்ணாடம் மீனவர் தெருவில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மயானக்கொள்ளை திருவிழா நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அங்காளம்மன் ஊர்வலமாக வெள்ளாற்றங்கரை மயானத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கு மயானக்கொள்ளை நடைபெற்றது. முன்னதாக பொதுமக்களை முறத்தால் அடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com