

புதுவை வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காலை 5 மணியளவில் கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாடவீதியில் அம்மன் வீதிஉலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது. இதில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்துகொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். மறுநாள் (17-ந் தேதி) தெப்ப உற்சவம், 23-ந் தேதி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி தாசில்தாரும், கோவில் தனி அதிகாரியுமான ராஜேஷ் கண்ணா, தேர் கமிட்டியினர், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.