

தமிழ் புத்தாண்டு தினமான நேற்று சித்திரை விசு திருவிழா தமிழகத்தின் பெரிய கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவினால் சித்திரை விசு திருவிழாவினை பக்தர்களால் விமரிசையாக கொண்டாட முடியவில்லை.
கேரள மாநிலத்தில் விசு கனி காணும் நாள் என்று பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். இதற்காக முதல் நாளிலிருந்தே கோவில்களில் களைகட்டும். இந்த ஆண்டு கொரோனோ பாதிப்பினால் கேரள மாநிலத்தில் பெரும்பாலான கோவில்களில் விழா நடைபெறவில்லை. அச்சன் கோவிலில் உள்ள அய்யப்பன் கோவிலில் விசு கனி விழா நடைபெற்றது. இதற்காக பழங்கள், வஸ்திரம் போன்றவை கோவில் சன்னதி முன்பு வைக்கப்பட்டிருந்தது. அர்ச்சகர் மட்டும் கோவிலில் பூஜை செய்தார். பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தமிழக-கேரள பொதுமக்கள் தங்களது வீடுகளில் கிருஷ்ணரின் படம் முன்பு பழங்கள் வைத்து பூஜை செய்தனர்.