யோகத்தை அள்ளித் தரும் சுக்கிர பகவானின் மூல மந்திரம் வழிபாடுகள்

ஒருவன் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க ஜாதகத்தில் சுக்கிர பகவான் உச்சமோ பெற்றிருக்க வேண்டும்செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை இம்மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
யோகத்தை அள்ளித் தரும் சுக்கிர பகவானின் மூல மந்திரம் வழிபாடுகள்
Published on

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்

கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே

வசமானய ஸ்வாஹா

ஒருவர் தனது வாழ்வியலில் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தால் அவருக்கு "சுக்கிரத் திசை" என சிலர் கூற நாம் கேள்விப் பட்டிருப்போம்.

ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க அவரது ஜாதகத்தில் சுக்கிர (கிரகம்) பகவான் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லாதவர்களும் செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை உச்சரிக்க வேண்டிய "ஸ்ரீ சுக்கிர பகவான் மற்றும் ஸ்ரீமகாலட்சுமியின் மூல மந்திரங்கள் வருமாறு:

சுக்கிர பகவான் மந்திரம்

"ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.

ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்"

சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்

வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்!

வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே

அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!

சுக்ர காயத்ரீ மந்திரம்

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

தநுர் ஹஸ்தாய தீமஹி

தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com