விதுரர் துரியோதனனை வைத்து கிருஷ்ணரின் லீலை

வனவாசம் முடிந்த பாண்டவர்களுக்கு பாதிநாட்டைக் கொடுக்கும்படி கேட்டார் கிருஷ்ணர்.தன்னை அறியாமலேயே அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டனர்.
விதுரர் துரியோதனனை வைத்து கிருஷ்ணரின் லீலை
Published on

பாண்டவர்களின் சார்பாக கவுரவர்களிடம் தூது புறப்பட்டார் கிருஷ்ணர்.

கவுரவர்களின் அரண்மனைக்குச் செல்லாமல், அவர்களது சித்தப்பாவான விதுரரின் மாளிகைக்குச் சென்று விருந்துண்டார்.

முதலில் தங்களைத் தேடி வராத கிருஷ்ணரை அவமதிக்க முடிவெடுத்தான் துரியோதனன்.

அவையில் இருந்தவர்களிடம், "யாரும் கிருஷ்ணர் வரும் போது எழுந்திருக்காமல்,

அவரை அவமதிக்க வேண்டும்," என்று உத்தரவிட்டான்.

ஆனால், கிருஷ்ணரைக் கண்டதும் அவருடைய தேஜஸில் மயங்கி,

தன்னை அறியாமலேயே அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டனர்.

துரியோதனன் மட்டும் ஏளனத்துடன், "கிருஷ்ணா! நீர் தூது வந்ததன் நோக்கம் என்ன?" என்று கேட்டான்.

வனவாசம் முடிந்த பாண்டவர்களுக்கு பாதிநாட்டைக் கொடுக்கும்படி கேட்டார் கிருஷ்ணர்.

ஆனால், துரியோதனனோ ஒரு பிடி மண் கூட கிடையாது என்று மறுத்துவிட்டான்.

நல்லவரான விதுரர் மட்டும் துரியோதனிடம் தர்மத்தை எடுத்துச் சொன்னார்.

ஆனால், விதுரரின் பிறப்பைப் பற்றி பேசி, துரியோதனன் அவரை அவமதித்தான்.

"தர்மத்தின் பக்கம் தான் நிற்பேன்! என்னுடைய வில்லைக் கொண்டு அதர்மத்திற்கு உதவி செய்ய எனக்கு மனமில்லை!"

என்று சொல்லி, அவர் தன் வில்லை முறித்துவிட்டார்.

நல்லவரான விதுரர், செஞ்சோற்றுக்கடனுக்காக துரியோதனுக்கு உதவினால்,

பாண்டவர்களால் போரில் வெல்ல முடியாது என்பதால்,

துரியோதனுக்கும், விதுரருக்கும் வாதத்தை உருவாக்கி,

அவரது கையாலேயே முக்கியமான ஒரு வில்லையும் ஒடிக்கச் செய்தது கிரிஷ்ணரின் தந்திரம் ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com